Friday, April 10, 2009

கார் வாங்கிய கதை( புத்தம் புதிய பதிப்பு )

நாங்கள் கார் வாங்க எண்ணியவுடன் எங்கள் முன் மூன்று கேள்விகள் தோன்றியது. பழைய டப்பா காரா , பழைய நல்ல காரா அல்லது புது காரா என்பதே அது. நன்கு யோசித்த போது புது கார் வாங்குவது என்று முடிவு செய்தோம் . புது கார் என்ன மாடல் என்று முடிவு செய்வதும் கடினமான காரியம். எனது நண்பர் ரங்கராஜனை மாருதி ஆல்டோ கார் கொண்டு வர சொல்லி அதில் குடும்பத்துடன் ஒரு ரவுண்ட் அடித்து பார்த்தபோது அந்த மாருதி ஆல்டோ கார் எங்களுக்கு பிடித்து விட்டது. மலிவான் விலையில் கிடைக்கும் மற்றும் அதிகம் பேர் வாங்குகிற மாருதி ஆல்டோ கார் வாங்க முடிவு செய்தோம்.

உடனே காருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின் வரும் வேலைகளை தொடங்கினோம்
1.கார் கொட்டகை 
2 கார் லோன் 
3.கார் கொட்டகை கதவு 
4.மதகு 
5.கார் ஓட்ட கற்றுக்கொள்ள 
6.நல்ல கொத்தனார் 
7.இடம் முடிவு செய்தல்
ஆகியவை

கற்றுக்கொண்ட கதை

கார் வாங்கபோகிறேன் என்றவுடன, எல்லோரும் என்னிடம முதல கேள்வி உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா என்று கேட்டனர்.உடனே பயம் வந்துவிட்டத .கார் ஓட்டுவது மிகவும் கடினமான காரியம் என்று எண்ணிவிட்டேன்.உடனே ஓட்டுனர் பள்ளியில் சேர்த்துவிட்டேன். மலர் ஓட்டுனர் பள்ளியில் ஓட்டுனர் பொறுமையாக சொல்லித்தருகிறார் என்று சேர்த்தேன். பாடம் முடிந்துவிட்டது.இப்போது பயம் போயே போய்விட்டது.எல்லோரும் வீனாக பயமுறுத்தி விட்டார்கள் என்று இப்போது தெரிந்து விட்டது.கார் ஓட்ட இப்போது நன்றாக வந்துவிட்டது.நெய்வேலியில் நானே தனியாக ஒரு ரவுண்ட் சென்று வந்து விட்டேன்.
சென்ற வாரம் ஊருக்கு போய் உறவினர் அனைவரிடமும் கண்பித்து வந்துவிட்டேன்.
அனைவருக்கும் கார் பிடித்துவிட்டது.

கார் கொட்டகை கட்டும்போது கவனிக்கவேன்டியவை:

காரைவிட கார் கொட்டகை நன்கு பெரியதாக இருக்கவேன்டும்.

இரு பக்கமும் இரண்டு அடிக்கு குறையாத எடம் இருக்கவேன்டும் ( கர்ர் கதவை திறக்க முடியவேண்டும்). 

முன்னும் பின்னும் மூன்று அடி எடம் இருக்கவேண்டும்(முன்னால் இடிக்காமல் இருக்க வேண்டும்)

பக்கத்து வீட்டு நண்பரை ஐடியா கேட்டு அதற்கு எதிரிடையாக கட்டவேண்டும்.
( அவர் அவருக்கு சவுகர்யமாக இருக்கவே ஐடியா சொல்லுவார்).

ஏன் இவ்வளவு நீளம?்  
ஏன் இவ்வளவு அகலம?் 
என்றெல்லாம் சொல்லி நம்மை குழ்ப்பி விடுவார்.
அவருடைய கொட்டகைக்கு போகும் வழியில் சிமென்ட் போட ஐடியா கொடுப்பார். 
எல்லாவற்றையும் ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டு விட வேண்டும்.

No comments: